சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் உன்னி முகுந்தன் நடிக்க உள்ளார் என்ற தகவல் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பராசக்தி’. இந்த படத்தின் இசையை ஜி. வி. பிரகாஷ் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் வசூல் வேட்டையாடியது. மேலும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றது. ராணுவ வீரரின் உண்மை கதையில் அப்படியே பாந்தமாக பொருந்தியிருந்த சிவகார்த்திகேயனின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. அந்த படம் அவரது சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக மாறிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இயக்குனர் சுதா கொங்கராவுடன் கூட்டணி அமைத்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் இப்போதே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.