May 21, 2024

உருளைகிழங்கு ஆம்லெட் செய்வது எப்படி…

குழந்தைகளுக்கு வித்தியாசமான முறையில் ஆம்லெட் செய்ய வேண்டும் என்றால் உருளைக்கிழங்கு சேர்த்து ஆம்லெட் செய்யலாம்.

தேவையான பொருட்கள்

முட்டை – 5

உருளைக்கிழங்கு – 2

மிளகாய் – 5

பி. வெங்காயம் – 1

வெண்ணெய் – சிறிது

உப்பு – தேவைக்கேற்ப

கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை

1. முதலில் கொத்தமல்லி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை தோலுரித்து பொடியாக நறுக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

2. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். வெங்காயம், உருளைக்கிழங்கு, கொத்தமல்லி தழை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.

3.பின்னர் நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் தடவி உருளைக்கிழங்கு மற்றும் முட்டை கலவையை ஊற்றி ஆம்லெட் போல் சமைக்கவும்.

4. நன்றாக வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து பரிமாறவும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!