சென்னை: தினமும் அரிசி இட்லி, தோசை சாப்பிட்டு சலிப்படைந்தவர்களுக்கு மாற்றாக, சிறுதானியமான ராகியை பயன்படுத்தி சுவையான இட்லி தயாரிக்கலாம்.
இந்த இட்லி தனித்துவமான சுவையையும் தயாரிப்பு முறையையும் கொண்டுள்ளன. சிலவற்றை உடனடியாகத் தயாரிக்கலாம். ராகி இட்லி தயாரிப்பு முறை உங்களுக்காக.
தேவையான பொருட்கள்:
ராகி மாவு – 1 கப்
தயிர் – அரை கப்
துருவிய கேரட் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, தயிர், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி மாவுப் பதத்துக்குக் கலக்கவும். அதில் துருவிய கேரட்டைச் சேர்க்கவும்.
விருப்பப்பட்டால் கடுகு, கறிவேப்பிலையைத் தாளித்துச் சேர்க்கலாம். மாவை 15 முதல் 20 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்னர் சிறிதளவு பழ உப்பு சேர்த்துக் கலந்து, எண்ணெய் தடவிய இட்லித் தட்டுகளில் ஊற்றவும். 10 முதல் 12 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்தால் ராகி இட்லி தயார்.
