சென்னை: அசைவ உணவு பிரியர்களுக்கு மிகவும் பிடித்த கிட்னி ஃபிரையை ஓட்டல் சுவையில் வீட்டிலேயே செய்து அசத்தலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
ஆட்டு கிட்னி – கால் கிலோ
உப்பு தூள் – அரை தேக்கரண்டி (தேவைக்கு)
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
காஷ்மீரி சில்லி பொடி – ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – முக்கால் தேக்கரண்டி
கொத்து மல்லி தழை – சிறிது
புதினா – முன்று இதழ்
பச்சை மிளகாய் – ஒன்று
வெங்காயம் – ஒன்று
பட்டை – சிறிய துண்டு (கால் இன்ச் அளவு)
கரம் மசாலா தூள் – ஒரு சிட்டிகை
தக்காளி ஒன்று – சிறியது
எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
நெய் – கால் தேக்கரண்டி
செய்முறை: முதலில் கிட்னியை நடுவில் இருக்கும் கொழுப்பை மட்டும் அகற்றி விட்டு இரு முறை கழுவி மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் ஊறவைக்கவும்.
பிறகு மறுபடி இருமுறை கழுவி தண்ணீரை வடிய விடவும். கிட்னியில் உப்பு, இஞ்சி பூண்டு விழுது, காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். தக்காளியை நான்கு துண்டாக வெட்டி அதில் போடவும். அவற்றை ஐந்து நிமிடம் ஊறவைத்து, குக்கரில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல், முன்று விசில் வரும் வரை வேக விட்டு இறக்கவும்.
இப்போது அதில் நிறைய தண்ணீர் நிற்கும் அதை வற்ற விடவும். தனியாக ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றி பட்டை, வெங்காயம் மீடியமாக அரிந்து சேர்த்து தாளிக்கவும். வற்றிய கிட்னியை அதனுடன் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி, பச்சை மிளகாயை பொடியாக அரிந்து சேர்த்து, கொத்துமல்லி, புதினா, நெய், சேர்த்து, கரம் மசாலா, தூவி நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.