சென்னை: வாழைத்தண்டு உடல் எடையினைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதில் பொரியல் அல்லது கூட்டு செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் வாழைத்தண்டில் அருமையான சுவையில் சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையானவை:
வாழைத்தண்டு – 1,
தேங்காய் – 1 கீற்று,
தனியா – 1/4 டீஸ்பூன்,
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்,
கடுகு – ¼ ஸ்பூன்,
உளுந்து பருப்பு – 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 4,
பூண்டு – 1/2,
புளி – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: வாழைத்தண்டை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுந்து, கடலைப் பருப்பு, தனியா சேர்த்து வதக்கவும்.
அடுத்து வாழைத்தண்டு, தேங்காய் துருவல், புளி, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி மிக்சியில் போட்டு அத்துடன் பூண்டு, உப்பு சேர்த்து மைய கொள்ளவும்.
அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து கொட்டி இறக்கினால் வாழைத்தண்டு சட்னி ரெடி.