தேவையான பொருட்கள்:
பீட்ரூட் – 2
பச்சை மிளகாய் – 3
சீரகம் – ¼
புதினா – 1 கைப்பிடி
கொத்தமல்லி இலை – ஒன்றரை கைப்பிடி
எலுமிச்சை – ½ மூடி
தேங்காய் – ½ மூடி
பூண்டு – 2 பல்
இஞ்சி – 1 இன்ச் அளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – ¼ தேக்கரண்டி
கடலைப்பருப்பு – ½ டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ½ டீஸ்பூன்
கருவேப்பிலை – சிறிது
பெருங்காயம் – சிறிது
செய்முறை:
பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும். புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி உலர வைக்கவும். பூண்டு மற்றும் இஞ்சியை தோல் நீக்கவும். தேங்காயை துருவி அல்லது நறுக்கி வைத்துக் கொள்ளவும். எலுமிச்சை சாற்றை பிழிந்து விதைகளை அகற்றவும். புதினா, கொத்தமல்லி தழை, பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்க்கவும். சிறு துண்டுகளாக நறுக்கிய பச்சை மிளகாயைச் சேர்க்கவும். பிறகு சீரகம் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். கடைசியாக அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும். இப்போது கடாயை அடுப்பில் வைத்து சூடான எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு வதக்கவும். பிறகு பச்சை கறிவேப்பிலை சேர்க்கவும். உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். கடைசியாக பெருங்காயம் சேர்த்து சட்னியில் சேர்த்தால் சுவையான பீட்ரூட் சட்னி ரெடி. !