தேவையான பொருட்கள்:
குதிரைவாலி – 1 கப்
முளைகட்டிய பயிறு – ¼ கப்
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – சிறிது
கருவேப்பிலை – ¼ டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி – ¼ கப்
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை: குதிரைவாலியை 2 மணி நேரம் ஊறவைத்து, முளைகட்டிய பயிறு, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தோசை மாவாக அரைக்கவும். தோசை கல்லை சூடாக்கி, சற்று கனமான தோசைகளாக ஊற்றி, எண்ணெய் சேர்த்து இருபுறமும் சுட்டெடுக்கவும். சுவையான குதிரைவாலி அடை தயார்.