தேவையான பொருட்கள்:
அவல் – 5 கப்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
தேங்காய் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பெரிய துளை உள்ள சல்லடையில் போட்டு சலித்து கொள்ளவும். பிறகு வாணலியில் சேர்த்து கைகளால் அழுத்தினாலும் நிறம் மாறாமல் வறுக்கவும். பிறகு ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீருக்கு 1 கப் அவல் வீதம் 4.5 கப் தண்ணீர் ஊற்றி எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் அரைத்த அவல் சேர்த்துக் கிளறவும். கடாயில் ஒட்டாமல் அவல் ஒன்றாக வந்ததும் அடுப்பை அணைக்கவும். பிறகு வேகவைத்த மாவை வேறொரு தட்டில் மாற்றி, குளிர்ந்த நீரில் கைகளை நனைத்து, உருண்டை பிடிக்க நன்றாக அழுத்தவும். இப்போது ஒவ்வொரு உருண்டையையும் இடியாப்ப மோல்டாக அழுத்தி இட்லி பாத்திரத்தில் போட்டு 10 நிமிடம் கொதிக்கவிடவும். அவ்வளவுதான். சுவையான அவல் இடியாப்பம் தயார். எப்போதும் போல் தேங்காய் மற்றும் சர்க்கரை அல்லது தேங்காய் பால் சேர்த்து சாப்பிடலாம்.