தேவையான பொருட்கள்:
உரித்த பூண்டு – 2 கப்
புளி – எலுமிச்சை அளவு
10 காய்ந்த மிளகாய்
கடுகு – 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
வெல்லம் – சிறிது
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: பூண்டு, புளி, உப்பு, மிளகாய், வெல்லம் ஆகியவற்றை நைசாக அரைக்கவும். பிறகு, கடாயில் அதிக எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு, சிவந்ததும் அரைத்த பொருட்களைச் சேர்த்து நன்கு வதக்கவும். ஆறவைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும். இது அஜீரணம் மற்றும் வயிற்றுக் கோளாறுகளுக்கு ஏற்றது.