சூப்பர் சுவையில் சேனைக்கிழங்கு பொரியல் செய்முறை
சென்னை: பலரும் சேனைக்கிழங்கை ஒதுக்கி விடுவார்கள். நிறைய சத்துக்கள் அடங்கிய இதில் ருசியான பொரியல் செய்வது பற்றி உங்களுக்காக.
தேவையானவை: சேனைக்கிழங்கு – கால் கிலோ (தோல் சீவி, பெரிய துண்டுகளாக்கவும்) மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
அரைக்க: தேங்காய்த் துருவல் – ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன் தோல் சீவிய இஞ்சி – ஒரு இன்ச் துண்டு பூண்டு – 3 பல் சோம்பு, சீரகம் – தலா கால் டீஸ்பூன்.
செய்முறை: சேனைக்கிழங்குடன் மஞ்சள்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேகவைத்து, நீரை வடியவிடவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாக மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு கிளறவும். அதனுடன் வேகவைத்த சேனைக்கிழங்கு சேர்த்து மிதமான தீயில் கிளறி இறக்கவும்.