சென்னை: வித்தியாசமான சுவையில் ஆப்பிள் சாஸ் துவரம் பருப்பு சேர்த்து செய்வது எப்படி என்று பார்க்கலாம். இது உங்கள் குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்.
தேவையானவை
370 கி. துவரம்பருப்பு
1 மேசைக் கரண்டி ஆலிவ் ஆயில்
1 வெங்காயம், நன்றாக நறுக்கியது
2 பூண்டு பல்லுகள், நசுக்கியது
3 தேக்கரண்டி சீரகப் பொடி
2 தேக்கரண்டி மல்லித் தூள்
1/2 தேக்கரண்டி மிளகாய் பொடி
1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
1 கிலோ ஆப்பிள், தோலுரித்து, விதைகள் எடுத்து, துண்டாக்கியது.
1 லிட்டர் (6 கப்) வேகவைத்த காய்கறி நீர் (வெஜிடபிள் ஸ்டாக்)
சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகு
செய்முறை: பருப்பை நன்றாக கழுவவும். அகன்ற பாத்திரத்தில் மிதமான சூட்டில் எண்ணெயை சூடாக்கவும். வெங்காயத்தை சேர்த்து வதக்கவும், 5 நிமிடங்கள் அதை கலக்கி விடவும். பூண்டு, சீரகம், மல்லி, மிளகாய் பொடி, மஞ்சளை சேர்த்து, 30 நொடிகள் அல்லது வாசனை வரும் வரை விடவும். பருப்பு வகைகளைச் சேர்த்து, வெங்காய கலவையுடன் கலக்கிவிடவும். தோல் உரித்து வெட்டிய ஆப்பிள், வெஜிடபிள் ஸ்டாக்கை சேர்த்து கொதிக்க விட வும். கொதிக்கும் அளவுக்கு சூட்டை அதிகரிக்கவும்.
சூட்டைக் குறைத்து லேசாக கொதிக்க வைத்து 15 நிமிடங்கள் வரை அல்லது ஆப்பிள் மென்மையாகும் வரை கலக்கி விடவும். இந்த கலவையை லேசாக, மாஷ்ஷரில் போட்டு மாஷ் செய்யவும். சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகு சேர்க்கவும். கார்லிக் பிரெட்டுடன் பரிமாறவும்.