தக்காளி மசாலா செய்து பார்த்து இருக்கிறீர்களா. அருமையாக இருக்கும் இந்த ரெசிபி மிகவும் எளிதானது. அதற்கான செய்முறை உங்களுக்காக!!!
tomato spices,green chillies,coriander powder,cumin,ginger ,தக்காளி மசாலா, பச்சை மிளகாய், மல்லி தூள், சீரகம், இஞ்சி
தேவையான பொருள்கள்
தக்காளி – 6
பெரிய வெங்காயம் – 2
நெய் – 4 ஸ்பூன்
மல்லிஇலை – 1 கப்
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
சீரகம் – 1 ஸ்பூன்
தனியாத் தூள் – 1 ஸ்பூன்
செய்முறை: வெங்காயம், தக்காளி கொத்தமல்லி மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் சீரகம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி பதினைந்து நிமிடங்கள் வேக விடவும். பின் அதனுடன் மிளகாய்தூள், மல்லிதூள், உப்பு, பச்சை மிளகாய், மல்லி இலை, நறுக்கிய இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும்.
கலவை கொதித்து கெட்டியாக வரும் போது அடுப்பில் இருந்து இறக்கவும். சுவையான தக்காளி மசாலா ரெடி.