தேவையான பொருட்கள்:
எள்
உளுத்தம் பருப்பு
காய்ந்த மிளகாய்
உப்பு
பெருங்காயம்
செய்முறை:
முதலில் எண்ணெய்யை ஊற்றாமல் வாணலியில் எள்ளை மட்டும் நன்கு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே வாணலியை பயன்படுத்தி எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் இவற்றை எல்லாம் தீய விடாமல் நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த அனைத்து சாமான்களையும் மிக்சியில் வைத்து உடன் உப்பு சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் சேர்த்து முன்பு வறுத்த எள்ளையும் வைத்து நன்றாகக் பொடியாக்கி அரைத்து வைத்துக் கொள்ளவும். இப்போது இந்தப் பொடியை தான் எள் சாதம் செய்ய பயன்படுத்த இருக்கிறோம். கறுப்பு எள் அதிக மருத்துவப் பண்புகள் கொண்டது. இதில் அதிகளவு சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளது.