சென்னை: ருசியான முறையில் தலைக்கறி குழம்பு எப்படி வைப்பது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
தலைக்கறி
சின்ன வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 3
இஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு
தேங்காய் – ஒரு மூடி
வரமிளகாய் – 2
மஞ்சள் தூள்
மிளகாய்த்தூள் – சிறிதளவு
மல்லித்தூள் – சிறிதளவு
பட்டை, கிராம்பு, சீரகம், சோம்பு, கசகசா – சிறிதளவு
கொத்தமல்லி புதினா தழை – சிறிது
தேவையான உப்பு
கொஞ்சம் எண்ணைய்
செய்முறை: முதலில் குக்கரில் எண்ணைய் விட்டு பட்டை கிராம்பு, சோம்பு, போட்டு பின் இஞ்சி பூண்டு போட்டு வதக்கி பின் தலைக்கறியை நன்கு வதக்கி சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு விசில் வரை விட்டு வேக வைத்துக்கொள்ளவும்
வாணலியில் கொஞ்சம் எண்ணைய் விட்டு பட்டை கிராம்பு சீரகம் போட்டு வதக்கி, சின்ன வெங்காயம், தக்காளி வரமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி பின் அரைக்கும் போது மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். தேங்காய் கசகசா சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் அரைத்த வைத்த மசாலா சேர்த்து கொஞ்சம் கொதி வந்தவுடன் வெந்த தலைக்கறியை சேர்த்து சிறிது மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும், பின் தேங்காய் விழுதினை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன், கொத்தமல்லி புதினா தழை தூவி இறக்கவும்.
டேஸ்ட் கூடுதலாக வேண்டுமெனில் சிறிதளவு மட்டன் மசாலா சேர்த்து கொதிக்கவிடவும்.கெட்டியாக கெட்டியாக குழம்பு டேஸ்டாக இருக்கும். கொதிக்கிற குழம்பில் மூளையை போட்டு எடுத்தாலே மூளை வெந்து விடும்.அதுவும் மிக சுவையாக இருக்கும்..