சென்னை: புதினா மற்றும் எலுமிச்சை நமது உடலுக்கு புத்துணர்ச்சியை தரக்கூடியவை. இது செரிமான தன்மையையும் மேம்படுத்தக்கூடியது. அப்படிப்பட்ட இந்த புதினா மற்றும் எலுமிச்சை கலந்து விர்ஜின் மோஜிடோ தயாரிக்கலாம் தெரியுமா ?
இது உங்கள் உடலில் ஏற்படும் வெப்பத்தை குறைத்து புத்துணர்ச்சியை தரும். இந்த பானம் இந்தியாவில் மிகவும் பிரபலமானது. இதனை எளிய முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
சோடா – 30 மில்லி
எலுமிச்சை – 1
ஐஸ் க்யூப்ஸ் – தேவைக்கேற்ப
புதினா இலைகள் – 8
சர்க்கரை பாகு – 20 மில்லி
உப்பு – சிறிதளவு
செய்முறை : எலுமிச்சையை இரண்டாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதில் ஒரு பாதியை கிளாஸில் பிழிந்துகொள்ளுங்கள். மற்றதை இரண்டு துண்டுகளாக நறுக்கி அதில் போடுங்கள். பின் புதினா இலைகளை சேருங்கள். அதோடு சர்க்கரை, உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு இவற்றை ஒரு மத்து கொண்டு நன்கு கடையுங்கள்.
அப்போது புதினா மற்றும் நறுக்கிப்போட்ட எலுமிச்சை சாறு வெளியேறி நல்ல சுவை கிடைக்கும். அதன்பின்பு இதில் சோடா அல்லது ஸ்பிரைட் ஊற்றி ஒரு ஸ்பூன் கொண்டு கலந்துவிடுங்கள். பின்பு தேவையான அளவு ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து ஷேக் பண்ணுங்க. அவ்வளவுதான் சுவையான விர்ஜின் மோஜிடோ தயார்.