தேவையானவை:
வாழைத்தண்டு நறுக்கியது – 1 கப்,
உப்பு – தேவையான அளவு,
கெட்டித் தயிர் – 1 கப் (சிலுப்பியது).
அரைக்க:
தேங்காய் துருவல் – ¼ கப்,
பச்சை மிளகாய் – 1,
சீரகம், கடுகு – தலா ¼ டீஸ்பூன்.
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கடுகு, சீரகம் – தலா ¼ டீஸ்பூன்,
சிவப்பு மிளகாய் – 1,
பெருங்காயம், கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை:
வாழைத்தண்டை சிறிது உப்பிட்டு குக்கரில் வேகவிட்டு வடித்து ஆறவிடவும். அரைக்கும் பொருட்களை மைய அரைத்து சிலுப்பிய தயிரில் கலந்து ஆறவிட்ட வாழைத்தண்டையும் சேர்த்து நன்கு கலந்து தேங்காய் எண்ணெயை சூடாக்கி தாளிக்கும் பொருட்கள் சேர்த்து தாளித்து வாழைத்தண்டு, மோர் கலவையில் சேர்த்து கலந்த சாதங்களுடன் பரிமாறவும்.