தேவையான பொருட்கள்:
2 கப் சாதாரண இட்லி / தோசை மாவு
2 சிறிய பீட்ரூட்
1 வெங்காயம், பொடியாக நறுக்கியது
1 சிறிய தக்காளி, பொடியாக நறுக்கியது
1/2 குடைமிளகாய் , பொடியாக நறுக்கியது
3 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
சமையலுக்கு எண்ணெய்
சுவைக்கு உப்பு
அழகுபடுத்த கொத்தமல்லி இலைகள்
பீட்ரூட் ஊத்தாபம்
செய்முறை:
பீட்ரூட்டை சின்னத் துண்டுகளாக வெட்டி அதை மிக்சியில் போட்டு மையாக அரைக்கவும். கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் இட்லி/தோசை மாவுடன் அரைத்த விழுதை சேர்க்கவும். தேவைப்பட்டால் மாவை மெல்லியதாக தண்ணீர் சேர்க்கவும். ஆனால் உத்தபங்களுக்கு வழக்கமான தோசைகளை விட கெட்டியான மாவு தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். மாவும் பீட்ரூட்டும் நன்றாக சேரும் வரை மாவை கலக்கிக்கொள்ளவும். பின்னர் ஒரு சூடாக்கப்பட்ட நான்-ஸ்டிக் தவாவில் ½ தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.
ஒரு பெரிய கரண்டி மாவை அதன் மீது ஊற்றி வழக்கமான உத்தபம் போல, மாவை தடிமனாக வார்க்கவும். மேலே சிறிய அளவில் நறுக்கிய காய்கறிகளை (வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், பச்சை மிளகாய்) சேர்த்து, மாவில் லேசாக அழுத்தவும். சிறிது உப்பு தூவிவிட்டு. தடிமனான உத்தாபத்தின் ஓரங்களில் அதிக எண்ணெய் சேர்க்கவும். சில நிமிடங்கள் மூடி வைத்து வேகவைக்கவும். உத்தாபம் லேசாக பழுப்பு நிறத்தில் மாறியதும் அதை திருப்பி மறுபுறம் சமைக்கவும். காய்கறிகளை தீய்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதை கொத்தமல்லி கொண்டு அலங்கரித்து, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.