சென்னை : இரவு வேளைகளில் கோதுமை மாவில் செய்யும் சப்பாத்தி போன்ற உணவுகளை சாப்பிட்டால், உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். சப்பாத்தி செய்யும் போது பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் பிரச்சனையாக மாவு மிருதுவான தன்மையுடன் இல்லை என்பது. சப்பாத்தி மாவினை மிருதுவான பத்துடன் செய்வது எப்படி என காணலாம்.
தேவையான பொருள்கள்
கோதுமை மாவு – 1 கிண்ணம்,
மைதா மாவு – 2 கரண்டி,
உப்பு – தேவையான அளவு,
வடித்த கஞ்சி தண்ணீர் – தேவையான அளவு.
செய்முறை : பாத்திரத்தில் எடுத்துக்கொண்ட கோதுமை மாவு மற்றும் மைதாவை சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.
இதன்பின்னர், சிறிதளவு வடித்த கஞ்சியை சேர்த்து மாவினை நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும்.
கோதுமை மற்றும் மைதா மாவு, வடித்த கஞ்சி தண்ணீர் நன்றாக கலந்ததும் தேவையான அளவு எண்ணெய் மற்றும் நீர் சேர்த்து சப்பாத்தி பதத்திற்கு மாவினை பிசைந்து வைத்துக் கொள்ளலாம்.
மாவை நன்றாக சப்பாத்தி பதத்திற்கு பிசைந்தும், மாவின் மேலே ஈரத்துணியை போட்டு 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
ஒரு மணிநேரம் கழிந்ததும் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சப்பாத்தி தேய்த்து கல்லில் போட்டு எடுத்தால், சுவையான மற்றும் மிருதுவான சப்பாத்தி தயார்.