சென்னை: அருமையான சுவையில் காலிஃபிளவர் பொரியல் செய்ோம் வாங்க.
தேவையான பொருட்கள்
காளிஃபிளவர் – 1/2 பூ
பெரிய வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1/4 தேக்கரண்டி
கரம்மசாலா தூள் – 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 2 கொத்து
தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை: காலிஃபிளவரை கொத்து கொத்தாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் போட்டு வடித்து வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து மசாலா தூள், மிளகாய் தூள் சேர்த்து, லேசாக கிளறிவிடவும். பின்னர் சுடுநீரில் வடிகட்டிய காலிஃபிளவரை போட்டு, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறி வேக வைக்கவும்.
காலிஃபிளவர் வெந்தவுடன் தேங்காய் துருவலைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். இப்ோது அருமையான சுவையில் காலிபிளவர் ொரியல் ரெடி.