தேவையான பொருட்கள்
சேமியா – 200 கிராம்
காளான்கள் – 1 கப்
புதினா – 1 கைப்பிடி
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – 1 குவியற் கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
பிரியாணி மசாலா – 1 தேக்கரண்டி.

செய்முறை
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்புடன் தாளிக்கவும். புதினா, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும். மஞ்சள் தூள், பிரியாணி மசாலா, நறுக்கிய காளான் சேர்த்து நன்கு கிளறவும். காளான் வெந்ததும், அரை லிட்டர் தண்ணீர் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும், வறுத்த சேமியாவை சேர்த்து தீயைக் குறைத்து கிளறவும். பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி, நெய் ஊற்றி, மூடி வைத்து ஐந்து நிமிடங்கள் வேகவைத்து பரிமாறவும். சுவையான காளான் சேமியா பிரியாணி தயார்.