சமையலறையில் பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் தழுவினால் கத்தியில் இருக்கும் துர்நாற்றம் நீங்கிவிடும். குடும்ப தலைவிகள் சமையலறையில் அதிகமாக பயன்படுத்தும் பால் பாத்திரத்தின், அடியில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும் . வீட்டில் உள்ளவர்கள் அதிகமாக சப்பாத்தி போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள்.
அளவுக்கு அதிகமாக கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது. வீட்டில் முக்கியமாக கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாக இருக்கும். இதற்கு எளிமையான முறையில் தீர்வு காணலாம். அதாவது, இரவில் படுப்பதற்கு முன் ப்ளீச்சிங் பவுடரைச் சிறிது எடுத்து கழிப்பறையிலும்
குளியலறையிலும் தூவி விட்டு அப்படியே விட்டு விட வேண்டும். கரப்பான் பூச்சித் தொல்லை இருக்காது.
குடும்ப தலைவிகளுக்கு முக்கிய பொறுப்பாக சமைத்தல் அவசியம். அதற்கு சமைக்கும் போது எரிபொருள் சிக்கனம் செய்ய வேண்டும். அதுபோல கீரையைத் தவிர எது சமைத்தாலும் பாத்திரத்தை மூடி வைத்தால் தேவையற்ற எரிபொருள் வீணாவதை தவிர்க்கலாம்.
மொசைக் தரையில் அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்க, வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சாக்பீஸ் தூள் மற்றும் சலவை சோடா கலந்து ஸ்பாஞ்சை வைத்து துடைத்து, பிறகு நல்ல தண்ணீரில் மீண்டும் ஒரு முறை துடைத்தால், தரை பளபளப்பாக இருக்கும்.