தேவையான பொருட்கள்:
மைதா மாவு – 2 கப்
சர்க்கரை – 3 கப்
பால் – 1 கப்
நெய் – 1 கப்
ஆரஞ்சு அல்லது எலுமிச்சை நிறம் – 1 சிட்டிகை
எலுமிச்சை – 5
முந்திரி – 10
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை
வெண்ணிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்
செய்முறை:
மைதா மாவுடன் சிறிது நெய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி ஆறவைக்கவும். அதில் பாலை ஊற்றி கட்டி இல்லாமல் நன்கு கரைக்கவும். எலுமிச்சம்பழத்தில் இருந்து விதைகளை நீக்கி பொடியாக நறுக்கவும். ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் நெய்யை சூடாக்கி, நறுக்கிய எலுமிச்சை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு ஆறவைத்து விழுதாக அரைக்கவும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் சூடானதும் சர்க்கரையை ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை கொதிக்க வைக்கவும். பிறகு மைதா கரைசலை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும். கலவை நுரை வந்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறவும். பிறகு அதில் சிறிது சிறிதாக நெய் ஊற்றவும். இப்போது கலவையில் சில துளிகள் எலுமிச்சை அல்லது ஆரஞ்சு நிறம், சில துளிகள் வெண்ணிலா எசன்ஸ், ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த பொடியாக நறுக்கிய முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து நன்கு கலக்கவும். கலவை பர்பி ஆனதும், அதை அடுப்பிலிருந்து இறக்கி, நெய் தடவிய தட்டில் ஊற்றவும். ஆறியதும் துண்டுகளாக வெட்டி பரிமாறவும். அதிக செலவில்லாமல் வித்தியாசமான சுவையில் எலுமிச்சை கேக் ரெடி.