சென்னை: குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு கோவைக்காய் கேரட் பொரியல் செய்து கொடுங்கள். அந்த அட்டகாசமான செய்முறை உங்களுக்காக.
தேவையான பொருட்கள்
கோவைக்காய் – 100 கிராம்
கேரட் – 100 கிராம்
பெரிய வெங்காயம் – 1 (சிறியது)
தக்காளி – 1 (சிறியது)
மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
மல்லித்தூள் – 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் – 2 சிட்டிகை
கறிவேப்பிலை – 1 கொத்து
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
சீரகம் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை: கோவைக்காயையும் கேரட்டையும் வட்ட வட்டமாக, மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், போட்டு தாளித்து, பிறகு கறிவேப்பில்லை, பெருங்காயம் சேர்க்கவும். பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு நறுக்கி வைத்துள்ள கோவைக்காய் மற்றும் கேரட்டைப் போடவும்.
அதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும். தண்ணீர் வற்றி காய் நன்கு வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். ருசியான கோவைக்காய் கேரட் பொரியல் ரெடி.