சென்னை: கோதுமை மாவில் லட்டு செய்து பாருங்கள். இந்த தீபாவளி ஸ்பெஷலாக வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க. பாராட்டி தள்ளி விடுவார்கள்.
தேவையானப் பொருட்கள்:
கோதுமை மாவு – 2 கப், பொடித்த சர்க்கரை – 2 கப், நெய் – 1 கப், முந்திரிப்பருப்பு – சிறிது, ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்.
செய்முறை: ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு அதில் முந்திரிப்பருப்பை சிவக்க வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் 1/2 கப் நெய்யை விட்டு சூடானதும் அதில் கோதுமை மாவைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும். அடுப்பை அணைத்து விடவும்.
வறுத்த கோதுமை மாவு, பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலந்துக் கொள்ளவும். மீதமுள்ள நெய்யை சூடாக்கி, கலந்து வைத்துள்ள மாவின் மேல் சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறி விடவும்.
பின்னர் எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். ரெடியாகிடுச்சு கோதுமை மாவு லட்டு.