தேவையானவை:
கெட்டி மாங்காய் – 1
கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
தாளிக்க
கடுகு.

செய்முறை:
மாங்காயை துருவி கொள்ளவும். ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, பருப்பை வதக்கவும். பின்னர் பச்சை மிளகாயை வதக்கவும். மாங்காயை துருவி போட்டு வதக்கவும். உப்பு சேர்த்து அரைக்கவும். ஒரு ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, கடுகு சேர்த்து கலக்கவும். சுவையான மாங்காய் துவையல் தயார். இதை டிபனுக்கு பரிமாறலாம். சாதத்துடன் கலக்கவும்.