தேவையான பொருட்கள்:
கடுகு- 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம்- 1 டேபிள் ஸ்பூன்
சீரகம்- 1 டேபிள் ஸ்பூன்
மல்லி விதைகள்- 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 8-10
கடலைப்பருப்பு- 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு- 1 டேபிள் ஸ்பூன்
ஒரு துருவிய மாங்காய்
வேக வைத்த அரிசி
தேவைக்கு ஏற்ப உப்பு
கொத்தமல்லி தழை
தாளிக்க
கடுகு- 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை- ஒரு கொத்து
செய்முறை:
கடாய் ஒன்றில் கடுகு, சீரகம், வெந்தயம், மல்லி விதைகள் மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.
பொருட்கள் அனைத்தும் பொன்னிறமாக மாறும் வரை கருகி விடாமல் ட்ரை ரோஸ்ட் செய்து, பின்னர் அவற்றை ஆற வைத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.அதே கடாயில் நெய் அல்லது எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
இப்போது கடலைப்பருப்பு பொன்னிறமாக வறுபட்டதும் நாம் அரைத்து வைத்த பொடியை சேர்த்து கிளறி விடவும். அடுத்தபடியாக துருவி வைத்த மாங்காய் மற்றும் வேக வைத்த சாதம் ஆகியவற்றை சேர்த்து கிளறுங்கள். பொருட்கள் அனைத்தும் ஒன்று சேரும் வரை கிளறவும்.
இறுதியாக தேவையான அளவு பசு நெய் மற்றும் உப்பு சேர்க்கவும். கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து மாங்காய் மசாலா சாதத்தை சூடாக பரிமாறவும். மாம்பழங்களைக் காட்டிலும் மாங்காயில் அதிக அளவு வைட்டமின் C காணப்படுகிறது. எனவே இது நமது சுவை மொட்டுகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், நமது ஆரோக்கியத்திற்கும் சிறந்த உணவாக அமைகிறது. இரும்பு உறிஞ்சுதலுக்கு வைட்டமின் C உதவி புரிவதால் ரத்த சோகை பிரச்சினையினால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு மாங்காய் பரிந்துரை செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆப்பிள் மற்றும் பெர்ரி பழங்களில் காணப்படும் பெட்டின் மாங்காயில் உள்ளது. இது நமது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று.