தேவை:
மேல் மாவிற்கு…
கோதுமை மாவு – 1/2 கப்,
கம்பு மாவு – 1 கப்,
உப்பு – தேவைக்கேற்ப.
திணிப்புக்காக…
துருவிய பனீர் – 1 கப்,
கேரட் – 1/4 கப்,
நறுக்கிய தக்காளி – 1,
துருவிய ஸ்வீட் கார்ன் – 1/8 கப்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை – 2 மேசைக்கரண்டி,
பச்சை மிளகாய் – 2,
உப்பு – 1 டீஸ்பூன்.
செய்முறை:
வாணலியில் 3/4 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதிக்கும் போது கம்பு மாவு மற்றும் உப்பு சேர்த்து மூடி வைக்கவும். மாவு சூடாகும் போது கோதுமை மாவு சேர்த்து சப்பாத்தி மாவாக பிசையவும். ஒரு பாத்திரத்தில் பனீர், கேரட், கொத்தமல்லி தழை, தக்காளி, சோள முத்து, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். மாவை சம அளவு உருண்டைகளாக உருட்டி, இரண்டு உருண்டைகளாக எடுத்து தனித்தனியாக 3 அங்குல அகலத்தில் சப்பாத்தி செய்யவும்.
ஒரு சப்பாத்தியின் நடுவில் 2 டேபிள் ஸ்பூன் ஸ்டஃபிங்கை பரப்பி, அதைச் சுற்றி 1/4 இன்ச் இடைவெளி விட்டு, அதன் மேல் மற்றொரு சப்பாத்தியை வைத்து, ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி, ஒன்றாக ஒட்டவும். மாவில் சுருட்டி கையால் தட்டி, மெதுவாய் பெரிய கனமான சப்பாத்தியாகத் திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் சேர்த்து, இருபுறமும் பொன்னிறமானதும், இறக்கி சூடாகப் பரிமாறவும்.