தேவைகள்:
சர்க்கரை வள்ளிக்கிழங்கு – 200 கிராம்
வெல்லம் – 100 கிராம்
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க விடவும். மேலே படிந்திருக்கும் அழுக்குகளை வடிகட்டி அகற்றவும். மீண்டும் ஐந்து நிமிடம் மிதமான தீயில் வைக்கவும். சர்க்கரைவள்ளிக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி வெல்லம் பாகில் போடவும். ஏலக்காய் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறவும். நெய்யை உருக்கி, அதில் ஊற்றி, அதனுடன் சேர்த்து, அடுப்பிலிருந்து இறக்கி, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கவும்.