சென்னை: கோதுமை நமது உடல் எடையினைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது. இந்த கோதுமையில் சுவையான பாயசம் செய்வது பற்றி தெரிந்து கொள்வோம்.
தேவையானவை
கோதுமை – 1 கப்பாதாம் பருப்பு -3முந்திரி பருப்பு -3உலர்ந்த திராட்சை -5வெல்லம் – 1 கப்நெய் – 2 ஸ்பூன்தேங்காய்த் துருவல் – 1 கப்பால் – 1/2 கப்ஏலக்காய்த் தூள் – 1 ஸ்பூன்
செய்முறை: கோதுமையினை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும், அடுத்து குக்கரில் கோதுமையைக் கொட்டி 3 விசில் வரை வேக விடவும்.
அடுத்து வாணலியில் வெல்லத்தை சேர்த்து தண்ணீர்விட்டு பாகுபோல் காய்ச்சவும். பின்னர் வெல்லப்பாகில் தேங்காய் துருவல் சேர்த்து வேகவிடவும். தொடர்ந்து வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, பாதாம், ஏலக்காய்த்தூள் சேர்த்து வறுத்து அதனை வெல்லப்பாகுக் கலவையில் கொட்டிக் கிளறவும்.
அடுத்து பால் மற்றும் வேகவிட்ட கோதுமை சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கினால் கோதுமை பாயாசம் ரெடி.