சென்னை: தினமும் ஒரேமாதிரியாக சாப்பிடாமல் புதுவிதமாக உங்கள் குடும்பத்தினர் சாப்பிட தக்காளி மசாலா பூரி செய்முறை உங்களுக்காக.
தேவையானவை:
கோதுமை மாவு – 2 கப்
ரவை – 1/2 கப்
தக்காளி – 4
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 1/2 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை: தக்காளியை சுடுநீரில் போட்டு தோலுரித்து கொள்ளவும். பின்னர் அதனை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.
தக்காளி விழுது, மிளகாய் தூள், கரம்மசாலா, சீரகம், உப்பு சேர்த்து கலக்கவும். அதனுடன் ரவை மற்றும் கோதுமை மாவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
அந்த மாவை சிறு உருண்டைகளாக்கி அதனை பூரிகளாக திரட்டி கொள்ளவும், பின்னர் அடுப்பில் கடாயை வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூரியை பொரித்து எடுக்கவும். அருமையான ருசியில் தக்காளி மசாலா பூரி ரெடி.