தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு…
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 1
குழம்பிற்கு…
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பட்டை – 2
கிராம்பு – 5
கல்பாசி – சிறிய துண்டு
அன்னாசிப்பூ – 1
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
காளான் – 200 கிராம்
தண்ணீர் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து பொரிய விட வேண்டும். பின் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும். பின்பு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, கல்பாசி, அன்னாசிப்பூ சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து அதில் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனைபோக வதக்க வேண்டும். அடுத்து மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும். பின் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து 2 நிமிடம் கிளறி, குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவினால் சுவையான காளான் குழம்பு தயார்.