தேவையான பொருட்கள்:
2 கப் நிலக்கடலை
1/2 கப் சர்க்கரை
4 டீஸ்பூன் கோகோ தூள்
2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
1 தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ்
செய்முறை :
இதை செய்வதற்கு முதலில் நிலக்கடலையை அடி கனமான பாத்திரத்தில் வறுக்க வேண்டும். சுமார் 10-12 நிமிடங்கள் வறுக்கவும். பின்னர் அதை சூடு தனிய ஆறவைத்துவிட்டு அதன் தூளை உரித்து தனியே நன்றாக ஆறவைக்கவும்.
பின்னர் ஒரு மிக்சியில் பருப்பது சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் அதோடு தேங்காய் எண்ணெய் சேர்த்து 5 நிமிடங்கள் அல்லது கெட்டியான மற்றும் கிரீமி பீனட் பட்டர் கிடைக்கும் வரை நன்றாக அரைக்கவும்.
பின்னர் அதில் சர்க்கரை, கோகோ தூள் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து முழுமையாக ஒன்றிணையும் வரை கலக்கவும். பின்னர் இதை அப்படியே எடுத்து பயன்படுத்தலாம். அல்லதுகொஞ்சம் ஆறவைத்து ஒரு கன்டைனரில் போட்டு பிரிட்ஜில் வைத்து எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.