தேவையான பொருட்கள்:
சுரைக்காய் – 3 கப்
நெய் – 3 டேபிள்ஸ்பூன்
சூடான பால் – 3 கப்
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
சர்க்கரை – 3/4 கப்
பாதாம் – 7 (நறுக்கியது)
செய்முறை:
முதலில் சுரைக்காய் தோலை உரித்து நன்றாக துருவவும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் சுரைக்காய் சேர்த்து அதில் உள்ள தண்ணீர் வற்றும் வரை 10 நிமிடம் நன்கு வதக்கவும். பின் அதில் பாலை ஊற்றி குறைந்த தீயில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பின் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி, பூசணி காய்ந்ததும் சர்க்கரை சேர்த்து சிறு தீயில் 5 நிமிடம் கிளறவும்.
பின் பாதாம் பருப்பால் அலங்கரித்து இறக்கி குளிர வைத்து பரிமாறினால், சுரைக்காய் அல்வா ரெடி!!!