ஹாங்காங்: ஹாங்காங்கின் தாய்போ மாவட்டத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட இந்த தீ, கண நேரத்தில் பல மாடிகளுக்கு பரவியது.
கட்டிடத்தை முழுவதும் விழுங்கும் விதமாக எழுந்த தீப்பிழம்புகளுடன் அடர் புகை வட்டாரம் முழுவதும் பரவியது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து திரளாகச் சென்றனர். தீயை கட்டுப்படுத்த முயற்சி தீவிரமாக நடைபெறுகிற நிலையில், இதுவரை குறைந்தது 4 பேர் உயிரிழந்ததாக தகவல் உறுதியாகியுள்ளது.
மேலும் பலர் உள்புறத்தில் சிக்கியதாகவும், சிலர் தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஷென்சென் எல்லைக்கு அருகே அடர்த்தியான குடியிருப்புகள் நிறைந்த தாய்போ பகுதி முழுவதும் பதட்டம் நிலவுகிறது. கட்டிடத்தினுள் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தீ பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மிகுந்த வேகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.