June 24, 2024

முதலை தாக்கியதில் ஆற்றில் மூழ்கி 8 பக்தர்கள் பலி

போபால்: மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டம் சிலாவத் கிராமத்தில் வசிக்கும் குஷ்வாஹா சமூகத்தை சேர்ந்த சில ஆண்களும், பெண்களும் கைலா தேவி கோவிலில் சாமி தரிசனம் செய்ய புறப்பட்டனர். மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள சம்பல் ஆற்றில் அவர்கள் நடந்து செல்கின்றனர். ஆதரவாக ஒருவரையொருவர் கைகளைப் பிடித்தபடி தண்ணீரில் நடந்து வருகின்றனர்.

இந்த ஆற்றில் பல முதலைகள் இருப்பதாக கூறப்படுகிறது. திடீரென்று ஒரு முதலை அவர்களைத் தாக்குகிறது. அவர்கள் பயந்து நீரில் மூழ்கினர். ஆற்றில் நீரோட்டமும் அதிகமாக உள்ளது. இதில் 8 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இருப்பினும் 9 பேர் நீந்தி கரைக்கு வந்தனர். ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் ஆற்றில் இறங்கி கோயிலுக்கு செல்ல வேறு வழியின்றி உள்ளனர். தேவகினந்தன் என்ற ஆண் (வயது 50), கல்லோ பாய் என்ற பெண் மற்றும் அடையாளம் தெரியாத ஆண் ஆகிய 3 பேரின் சடலங்களை இதுவரை போலீசார் மீட்டுள்ளனர். மீதமுள்ள 5 பேரை காணவில்லை. அவர்கள் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!