May 19, 2024

ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த நகைச்சுவை நடிகர் பாலா: நெகிழ்ந்த மலை கிராம மக்கள்

சென்னை: மலை கிராமங்களுக்கு தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார் விஜய் டிவி நகைச்சுவை நடிகர் பாலா என்று தெரிய வந்துள்ளது.

சின்னத்திரையில் நகைச்சுவை மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பாலா. ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் திரையுலகில் அறிமுகமான பாலா, ‘குக் வித் கோமாளி சமையல்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.

தொடர்ந்து பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி பல குழந்தைகளின் படிப்புக்கும் உதவுகிறார். மேலும், சமூக சேவையும் செய்து வருகிறார். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் குன்றி ஊராட்சி மலை கிராமத்திற்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை நகைச்சுவை நடிகர் பாலா வழங்கினார்.

மருத்துவ அவசர காலங்களில் மிகவும் அவதிப்படும் இக்கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் ரூ. 10 லட்சம் செலவில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை நடிகர் பாலா, மாவட்ட எஸ்.பி., மாநகராட்சி மேயர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதுகுறித்து நடிகர் பாலா கூறுகையில், ஈரோடு மாவட்டம் குன்றியை சுற்றியுள்ள 12 கிராமங்களில் 8 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு பாம்பு உள்ளிட்ட வன விலங்குகளால் பாதிப்பு ஏற்பட்டாலோ, உடல் நலம் பாதிக்கப்பட்டாலோ, 16 கி.மீ., தொலைவில் இருந்து ஆம்புலன்ஸ் வந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

இது தெரிஞ்சதும் அவங்களுக்கும் ஆம்புலன்ஸ் வாங்கணும்னு நினைச்சேன். யாரிடமும் பணம் வாங்காமல், என்னிடம் இருந்த பணத்தை சேமித்து இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை வாங்கியுள்ளேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!