May 19, 2024

வசந்த உற்சவம் தொடங்கியது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில்

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் தாயார் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

வசந்த உற்சவத்தின் போது, ரெங்கநாச்சியார் தாயார் சன்னதியின் பின்புறம் உள்ள அகழி போன்ற குழியில் நீர் நிரப்பப்பட்ட மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய மண்டபத்தின் நடுவில் அமர்ந்திருக்கிறார்.

இந்தாண்டு அன்னை வசந்த உற்சவம் நேற்று துவங்கியது. இதை முன்னிட்டு மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட ரெங்கநாச்சியார் மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபம் வந்தடைந்தார்.

அலங்காரத்தை கண்டு அமுது சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று உற்சவர் ரெங்கநாச்சியாரை தரிசனம் செய்தனர்.

பின்னர் ரெங்கநாச்சியார் வசந்த மண்டபத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழா வரும் 16-ம் தேதி வரை நடக்கிறது.

இதையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து ரெங்கநாச்சியார் புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபம் சென்றடைவார்.

வசந்த உற்சவ நாட்களில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை தாயார் மூலவர் சேவை கிடையாது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!