மும்பை: ஐபிஎல் போட்டிகள் துவங்குவதற்கு முன்பாக 10 அணிகளின் கேப்டன்களுடன் கூட்டம் நடத்த பிசிஐ புதிய திட்டம் தீட்டியுள்ளது.
IPL திருவிழா வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், 10 அணிகளின் கேப்டன்களுடன் கூட்டம் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இதற்காக வரும் 20-ல் மும்பையில் நடைபெறும் கூட்டத்தில் கேப்டன்கள், அணிகளின் மேனேஜர்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதில், IPL-ல் புதிதாக செய்யப்பட்டுள்ள மாற்றம் குறித்து தெரிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதன் பின் கேப்டன்களுக்கான போட்டோஷுட் நடத்தப்பட உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.