மும்பை: குஜராத் அணியின் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது பேசும் பொருளாக மாறி வருகிறது.
வாஷிங்டன் சுந்தருக்கு கூகுள் சுந்தர் ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
குஜராத் அணியின் ஆல்ரவுண்டரும், தமிழக வீரருமான வாஷிங்டன் சுந்தருக்கு, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஆதரவு தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த IPL போட்டியில், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்காதது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதில் ஒரு ரசிகர் X பக்கத்தில் இதுபற்றி விமர்சிக்க, பதிலுக்கு சுந்தர் பிச்சை “எனக்கும் கூட வியப்பாகவே இருந்தது” என கமெண்ட் செய்திருக்கிறார். இந்த விவகாரம் தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறி வருகிறது.