நாக்பூர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் போட்டி இன்று தொடங்குகிறது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதன் முதல் ஆட்டம் இன்று (பிப்.6) 1.30 மணிக்கு நாக்பூரில் தொடங்குகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இது ஒரு நல்ல அனுபவமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியை ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.