மும்பை: ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி ஏலத்தில் எடுத்த கே.எல். ராகுலுக்கு இப்படி ஒரு சோதனை வந்திருக்கக் கூடாது என கிரிக்கெட் விமர்சனங்கள் தெரிவிக்கின்றனர். என்ன காரணம் தெரியுமா?
பேட்டிங்கில் எந்த வரிசையிலும் களமிறங்கி கலக்கக் கூடியவர் KL ராகுல். ஐபிஎல் தொடர்களில் ஓப்பனராக களமிறங்கி வரும் அவரை, டெல்லி அணி ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
ஆனால், டெல்லி அணியில் அவர் ஓப்பனர் இல்லையாம். டு பிளெசிஸ், அபிஷேக் போரெல் ஆகியோர்தான் ஓப்பனர்களாக களமிறங்குவர் என்றும், KL ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதே ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கே எல் ராகுலை ஓபனிங் பேட்ஸ்மேனாக களம் இறக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.