மும்பை: இன்னும் ஒரு வாரத்தில் ஐபிஎல் திருவிழா ஆரம்பம் ஆக உள்ளதால் ரசிகர்கள் வெகு உற்சாகமாக உள்ளனர்.
கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது ஐபிஎல் 2025 தொடர். வருகிற 22ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது.
இதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 22ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளன.
சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் 23ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தத் தொடரை ரசிகர்கள் வெகு எதிர்ப்பார்ப்புடன் பார்க்க காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.