புதுடெல்லி: ஒவ்வொரு மாதமும் ஐசிசி சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து கௌரவித்து வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதத்திற்கு இந்த விருது பட்டியலில் சுப்மன் கில் இடம் பிடித்துள்ளார்.
ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கௌரவித்து வருகிறது. அதன்படி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் சுப்மன் கில், நியூசிலாந்தின் கிளேன் பிலிப்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
மகளிரில் ஆஸ்திரேலியாவின் அலனா, அன்னபெல் மற்றும் தாய்லாந்தின் திப்பாட்சா ஆகியோரின் பெயர்கள் உள்ளன.