இஸ்லாமா பாத் : பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இரண்டு பக்கமும் அடி விழுந்தது போல் உள்ளது என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். காரணம் என்ன தெரியுமா?
சாம்பியன் டிராபி தொடரை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 869 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. தொடரை நடத்திய பாக்., அணி ஒரு போட்டியை மட்டுமே அங்கு விளையாடியது.
ஒரு போட்டி துபாயிலும், ஒரு போட்டி மழையாலும் ரத்தாக, அந்த அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் பெரும் வருவாய் இழப்பை சந்தித்த அந்த கிரிக்கெட் வாரியம், வீரர்களுக்கு இனி 5 ஸ்டார் ஹோட்டல் கிடையாது, சம்பளம் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்திய அணியை தோற்கடித்து விடுவோம் என பாகிஸ்தான் அணி வீரர்கள் தெரிவித்து வந்த நிலையில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கோப்பையை இந்தியா தட்டிச் சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.