ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி புலவாயோவில் இன்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 12.4 ஓவர்களில் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான பிரையன் பென்னட் 21 ரன்களும், தடிவனேஷ மருமன் 16 ரன்களும் எடுத்தனர்.
வேறு எந்த பேட்ஸ்மேனும் இரட்டை இலக்கை எட்டவில்லை. பாகிஸ்தான் அணி சார்பில் சூபியான் முகீம் 2.4 ஓவர்களில் 3 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அப்பாஸ் அப்ரிடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 58 ரன்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 5.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சைம் அயூப் 36 ரன்களும், உமைர் யூசுப் 22 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி 2-0 என கைப்பற்றியது. முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடக்கிறது.