2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமென்டில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் ஜனவரி 31, 2025 அன்று தொடங்கியது.
இந்த பட்ஜெட் மத்திய பா.ஜ., அரசின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மூன்றாவது பட்ஜெட் மற்றும் நிர்மலா சீதாராமனின் எட்டாவது பட்ஜெட் ஆகும்.இந்த பட்ஜெட் இளைஞர் முன்னேற்றம், வேளாண்மை, வறுமி ஒழிப்பு மற்றும் உணவு உத்தரவாதம் ஆகிய முக்கிய அம்சங்களைக் கவனத்தில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட் வரிவிதிப்பு, நகர்ப்புற மேம்பாடு, கனிமவளம், நிதி மேலாண்மை, மின்சாரம் மற்றும் ஒழுங்குமுறை ஆகிய ஆறு துறைகளில் சீரமைப்புகளை முன்வைத்துள்ளது. இந்தியா உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக மாறும் நோக்கில் வேலை செய்து வருவதாகவும், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சியை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் நிதியமைச்சர் அறிவித்தார்.
அந்தவகையில், விவசாயம் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. பருப்பு உற்பத்தியில் ஆறு ஆண்டுகளில் தன்னிறைவு அடைவதற்கான இலக்கு மற்றும் 1.7 கோடி விவசாயிகளுக்கு புதிய திட்டத்தின் மூலம் உதவி வழங்கப்படவுள்ளது. பீஹாரில் தாமரை விதைகள் உற்பத்திக்கான புதிய வாரியமும் அமைக்கப்படும். மேலும், கிசான் கிரெடிட் கார்டுகளுக்கான உச்ச வரம்பு 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படவுள்ளது. சிறு மற்றும் குறு நிறுவனங்கள் இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.