ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சம்பா எல்லைப் பகுதியில் பதுங்கியிருந்த 7 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்று கொலை செய்தனர். இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் ராணுவ நடவடிக்கையில் இந்திய ராணுவம் தொடர் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்தது.இதையடுத்து பாகிஸ்தான் தொடர்ந்து ட்ரோன்கள் மூலம் ஆபத்தான செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்திய ராணுவம் இதுவரை பாகிஸ்தான் வீசிய 50 ட்ரோன்களையும் அழித்துள்ளது. இந்நிலையில், சம்பாவில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது ரகசிய தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில், எல்லைப் பாதுகாப்பு படையினர் 7 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்று தடுத்து நிறுத்தினர்.
இந்தச் சம்பவத்தையடுத்து அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், அங்கு மேலும் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கிறார்களா என்று தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. எல்லை பாதுகாப்பை உறுதிப்படுத்த ராணுவம் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.இந்த அதிரடி நடவடிக்கைகள், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவே இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நாட்டின் வடக்கு எல்லைப் பகுதிகளில் மீண்டும் அமைதியைக் கொண்டுவரும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.