பெங்களூரு: கர்நாடகாவில் தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கர்நாடக செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
2014-ம் ஆண்டு கொப்பல் மாவட்டம் மரகும்பி கிராமத்தில் சினிமா டிக்கெட் தொடர்பான தகராறில் தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் 117 பேர் பட்டியல் பழங்குடியினரின் வீடுகளுக்கு தீ வைத்து தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் 2 பேர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறார்களுக்கு எதிரான வழக்கு சிறார் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அவர்களுக்காக மட்டும் தனி விசாரணை நடத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் மற்றவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை சமூக அமைதியையும், நீதியையும் நிலைநாட்ட முக்கிய நடவடிக்கை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.