தெலுங்கானா: தெலுங்கானா மாநிலத்தில் வனவிலங்குகளை ஏற்றிச் சென்ற லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு உருவானது.
பீகாரிலிருந்து பெங்களூரு உயிரியல் பூங்காவுக்கு புலி, முதலைகள் உள்ளிட்ட விலங்குகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, தெலங்கானா மாநிலம் மொண்டிகுண்டா என்ற கிராமம் அருகே சாலையோரமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், கூண்டிலிருந்து வெளியேறிய 2 முதலைகள் வனத்துறையினர் உதவியுடன் பிடிக்கப்பட்டு, வேறு லாரி மூலம் பெங்களூரு அனுப்பி வைக்கப்பட்டன.
கூண்டில் இருந்த வெள்ளை புலிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இருப்பினும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.