கேரளா: கேரளாவில் டூவீலர் மீது கிரேன் மோதியதில் நர்சிங் மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவின் மலப்புரத்தில் சாலையில் திரும்புவதற்காக நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த கிரேன் மோதியதில் கீழே விழுந்த நர்சிங் மாணவி மீது கிரேனின் பின்சக்கரம் ஏறி இறங்கியது.
டூவீலரை ஓட்டி வந்தவர் உயிர்தப்பிய நிலையில், படுகாயமடைந்த மாணவி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தின் சி.சி.டி.வி பதிவு வெளியாகி உள்ளது.